சாம்சங் கேலக்ஸி M31 வாங்க பிளான் இருக்கா? ஒரு நிமிஷம் இங்க வாங்க!

சாம்சங் கேலக்ஸி M31 வாங்க பிளான் இருக்கா? ஒரு நிமிஷம் இங்க வாங்க!Tech Oreo Blaster Tamil | Updated: 30 May 2020, 

3:00 PM

சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. விலை மற்றும் முழு அம்சங்கள் இதோ!


🌟 சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனின் ஒரு புதிய மெமரி வேரியண்ட்டின் கீழ் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. அது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆன் போர்டு ஸ்டோரேஜ் மாடல் ஆகும். முன்னதாக சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் 6 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஆன் போர்டு மெமரியுடன் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

🌠புதிய 8ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.19,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மற்றும் தற்போது இது சாம்சங் இந்தியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

🌻இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடலானது ரூ.16,999 க்கு அறிமுகமானது பின்னர, ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட விலை உயர்வைத் தொடர்ந்து 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.17,999 ஆக உயர்ந்தது. சாம்சங் கேலக்ஸி எம் 31 ஸ்மார்ட்போன் ஆனது ஓஷன் ப்ளூ மற்றும் ஸ்பேஸ் பிளாக் கலர் விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.

💟 இருப்பினும் எப்போது முதல் இது விற்பனையை தொடங்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இக்கட்டுரையை எழுதும் நேரம் வரையிலாக, இந்த மாடல் 'நோட்டிஃபை மீ' விருப்பத்துடன் பட்டியலிடப்பட்டுள்ளது

டிஸ்பிளே, ப்ராசஸர், இயங்குதளம் (ஓஎஸ்)

🌷அம்சங்களை பொறுத்தவரை, டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எம் 31 ஆனது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த ஒன்யுஐ 2.0 கொண்டு இயக்குகிறது. இது 6.4 இன்ச் அளவிலான ஃபுல் எச்டி+ (1080x2340 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி-யு டிஸ்ப்ளேவ கொண்டுள்ளது - இது சூப்பர் அமோலேட் பேனலின் ஆதரவு மற்றும் 19.5: 9 என்கிற அளவிலான திரை விகிதத்தையும் கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, கடந்த ஆண்டு கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனில் இருந்த ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 SoC-ஐ கொண்டுள்ளது. இந்த ப்ராசஸர் 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது




பின்பக்க கேமரா:

❤ புகைப்படங்கள் மற்றும் வீடியோ துறைக்குள் வரும்போது, சாம்சங் கேலக்ஸி எம் 31 ஆனது க்வாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சாம்சங் ஐசோசெல் பிரைட் ஜி.டபிள்யூ 1 சென்சார் (எஃப் / 1.8) + 8 மெகாபிக்சல் (எஃப் / 2.2 மற்றும் 123 டிகிரி பீல்ட் ஆப் வியூ) அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 5 மெகாபிக்சல் மேக்ரோ (எஃப் / 2.4) கேமரா + 5 மெகாபிக்சல் (எஃப் / 2.2) அளவிலான டெப்த் கேமரா உள்ளது.

செல்பீ கேமரா மற்றும் கேமரா அம்சங்கள்:


💫 மேம்படுத்தப்பட்ட பொக்கே எபெக்ட்களுக்காக லைவ் ஃபோகஸ் ஆதரவும் இதில் உள்ளது. மேலும் சாம்சங்கின் பிரத்யேக நைட் மோட், சூப்பர் ஸ்டெடி மோட் மற்றும் சூப்பர் ஸ்லோ-மோ ஆகிய ஆதரவுகளும் உள்ளன. செல்பீக்கள் மற்றும் வீடியோ சாட்களுக்காக சாம்சங் கேலக்ஸி எம் 31 ஸ்மார்ட்போனில் ஒரு 32 மெகாபிக்சல் அளவிலான முன்பக்க கேமரா உள்ளது, இது 4 கே மற்றும் ஸ்லோ-மோ வீடியோ பதிவு செய்யும் திறனை கொண்டுள்ளது.


மெமரி, இணைப்பு ஆதரவுகள் மற்றும் சென்சார்:


மெமரி:




🌹சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனில் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 மெமரி விருப்பங்கள் உள்ளன, இவை இரண்டும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவையும் வழங்குகின்றது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை 4 ஜி வோல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது.

பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்:




❤ இந்த மொத்த அமைப்பும் ஒரு பெரிய 6,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின்படி, இது 26 மணிநேர வீடியோ பிளேபேக் அல்லது 119 மணிநேர மியூசிக் பிளேபேக்கை ஒரே ரீசார்ஜின் கீழ் வழங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் தொகுக்கப்பட்ட சார்ஜர் மூலம 15W வேகமான சார்ஜிங் சாத்தியமாகும். அளவீட்டில், இந்த் ஸ்மார்ட்போன் 8.9 மிமீ தடிமன் மற்றும் 191 கிராம் எடையும் கொண்டுள்ளது

 💫 டெக் உலகில் நடக்கும் அப்டேட்களுக்கு டெக்னாலஜி சார்ந்த செய்திகளுக்கு Tech Oreo Blaster தமிழ் வலைதளத்தின் டெக் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

                   🌹Thank you🌹 

Post a Comment

أحدث أقدم