Tech Oreo Blaster Tamil | Updated: 13 Jun 2020, 08:41:00 AM
ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போனின் புதிய 64 ஜிபி மாறுபாடு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது விற்பனை? இதோ முழு விவரங்கள்!
குறிப்பிட்ட நாளில் பிரபல இகாமர்ஸ் தளமான அமேசான், மி.காம் மற்றும் நாட்டின் பல்வேறு சில்லறை விற்பனை நிலையங்களின் வழியாக இது வாங்குவதற்கு கிடைக்கும்.
ரெட்மி 8 ஏ டூயல் ஸ்மார்ட்போன் ஆனது மிட்நைட் கிரே, ஸ்கை வைட் மற்றும் சீ ப்ளூ ஆகிய மூன்று வண்ணங்களில் வாங்க கிடைக்கும் ரேம் மற்றும் சேமிப்பக உள்ளமைவைத் தவிர, மீதமுள்ள ரெட்மி 8 ஏ டூயல் அம்சங்கள் ஆனது முன்னதாக வெளியான மாடல்களில் உள்ளதைப் போலவே தான் இருக்கின்றன.
ரூ.8,999 க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்? மிஸ் பண்ண கூடாத தரமான பட்ஜெட் போன்!
Muthuraj Arasappan | Samayam Tamil | Updated: 13 Jun 2020, 08:41:00 AM
ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போனின் புதிய 64 ஜிபி மாறுபாடு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது விற்பனை? இதோ முழு விவரங்கள்!
அது 3 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மாடலாகும். இது ரூ.8,999 என்கிற இந்திய விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது மற்றும் புதிய 64 ஜிபி ரெட்மி 8ஏ டூயலின் விற்பனை வருகிற ஜூன் 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
குறிப்பிட்ட நாளில் பிரபல இகாமர்ஸ் தளமான அமேசான், மி.காம் மற்றும் நாட்டின் பல்வேறு சில்லறை விற்பனை நிலையங்களின் வழியாக இது வாங்குவதற்கு கிடைக்கும்.
இந்த பிளான்களை யூஸ் பண்ணா.. 1 வருடத்திற்கு அமேசான் ப்ரைம் சந்தா FREE; ஜியோ அதிரடி அறிவிப்பு!
சியோமி நிறுவனம் அதன் ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போனை இரண்டு மெமரி வகைகளின் கீழ், சமீபத்தில் தான் இந்தியாவில் அறிமுகம் செய்தது. அது 2 ஜிபி ரேம் + 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி உள் சேமிப்பு ஆகும். இந்த ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.7,499 மற்றும் ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கின்றன. தற்போது இந்த மாடல்களுடன் 3ஜிபி + 64 ஜிபி மாடலும் இணைந்துள்ளது.
ரெட்மி 8 ஏ டூயல் ஸ்மார்ட்போன் ஆனது மிட்நைட் கிரே, ஸ்கை வைட் மற்றும் சீ ப்ளூ ஆகிய மூன்று வண்ணங்களில் வாங்க கிடைக்கும் ரேம் மற்றும் சேமிப்பக உள்ளமைவைத் தவிர, மீதமுள்ள ரெட்மி 8 ஏ டூயல் அம்சங்கள் ஆனது முன்னதாக வெளியான மாடல்களில் உள்ளதைப் போலவே தான் இருக்கின்றன.
ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே:
டூயல் சிம் ஆதரவு கொண்ட ரெட்மி 8ஏ டூயல் ஆனது ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த MIUI 11 கொண்டு இயங்குகிறது. இது 19: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட 6.22 இன்ச் அளவிலான எச்டி+ (720x1520 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை, டாட் நாட்ச் வடிவமைப்பின் கீழ் பெற்றுள்ளது. சியோமி நிறுவனம் இதை ஒரு வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் என்று குறிப்பிடுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பையும் கொண்டுள்ளது.
ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போனின் ப்ராசஸர், கேமராக்கள்:
இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 439 SoC உள்ளது, இது 3 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போனில் மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு அம்சமாக அதன் டூயல் ரியர் கேமரா அமைப்பு திகழ்கிறது. இந்த கேமரா அமைப்பில் 13 மெகாபிக்சல் அளவிலான மெயின் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் ஆகியவைகள் உள்ளது. சுவாரசியமாக இது AI போர்ட்ரெயிட் மோட் மற்றும் AI ஸீன் டிடெக்ஷன் மோட் ஆகியவைகளை ஆதரிக்கிறது. முன்பக்கத்தை பொறுத்தவரை, ரெட்மி 8ஏ டூயல் ஆனது ஒரு 8 மெகாபிக்சல் அளவிலான கேமராவை கொண்டுள்ளது. இது AI செல்பீ போர்ட்ரெய்ட் மற்றும் AI ஃபேஸ் அன்லாக் ஆகியவற்றை ஆதரிக்கிறது
Post a Comment