Tech Oreo Blaster Tamil | Updated: 06 Jun 2020, 10:45:00
சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் விலை, அம்சங்கள், வெளியீடு பற்றிய விவரங்கள்!....
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகமாகும் என்பதை உணர்த்தும் வண்ணம் அதன் விலை விவரங்களும், அதன் ஸ்டோரேஜ் சார்ந்த விவரங்களும் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.
வெளியான புகைப்படம் ஒன்றின் வழியாக ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸூம், அதன் வழியாக ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் வண்ண விருப்பங்களையும் நம்மால் அறிய முடிகிறது. அது ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பையும் காட்டுகிறது.
ரெட்மி 9 ஒரு வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் வடிவமைப்பையும் மற்றும் பின்புறத்தில் ஒரு குவாட் கேமரா அமைப்பையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்புற கைரேகை சென்சார் ஆனது கேமரா சென்சார்களுக்கு கீழே அமரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஹிலியோ ஜி 80 ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் என்றும் இது 5,000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என்றும் சமீபத்திய லீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.
ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் (எதிர்பார்க்கப்படும்) விலை:
கிஸ்மோசினா வலைத்தளத்தின்படி, ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் என இரண்டு விருப்பங்களில் அறிமுகம் செய்யப்படும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை 3 ஜிபி + 32 ஜிபி சேமிப்பு மாடலானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.10,500 க்கும் மறுகையில் உள்ள 4 ஜிபி + 64 ஜிபி சேமிப்பு மாடலானது தோராயமாக ரூ.11,200 க்கும் அறிமுகம் ஆகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் (எதிர்பார்க்கப்படும்) வண்ண விருப்பங்கள்:
இந்த ஸ்மார்ட்போன் கிரே, சன்செட் பர்பில் மற்றும் க்ரீன் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் (எதிர்பார்க்கப்படும்) வெளியீட்டு தேதி:
வெளியீட்டு தேதியைப் பொறுத்தவரை, ரெட்மி 9 ஆனது ஜூன் 25 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கிஸ்மோசினா அதை விட முன்பாகவே அறிமுகம் ஆகும் என்று பரிந்துரைத்துள்ளது. ரெட்மி 9 சீரிஸ் வெளியீடு குறித்து எந்த தகவலையும் சியோமி நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், அதிகரித்து வரும் கசிவுகளின் அடிப்படையில் பார்த்தால், ரெட்மி 9 விரைவில் தொடங்கப்பட வேண்டும்.

ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் (எதிர்பார்க்கப்படும்) வடிவமைப்பு:
ரெட்மி 9 ரீடெயில் பாக்ஸ் படத்தின்படி, முன்னரே குறிப்பிட்டபடி ரெட்மி 9 ஆனது வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் அப் வடிவமைப்பானது அதன் முன்பக்கத்தில் இருப்பதைக் காட்டுகிறது. ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று பட சென்சார்கள் ஒரே வரிசையில் வைக்கப்பட்டுள்ளன, நான்காவது கேமரா சென்சார் ஃபிளாஷின் பக்கத்தில் அமர்ந்திருக்கிறது.
கைரேகை சென்சார் பின்புற பேனலின் மேல் மையத்தில் உள்ள மூன்று கேமரா சென்சார்களுக்கு கீழே அமர்ந்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மேட் பேக் பேனல் பூச்சையும் காண முடிகிறது.

ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் (எதிர்பார்க்கப்படும்) அம்சங்கள்:
ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் அளவிலான புல் எச்டி எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் மீடியாடெக் ஜி 80 எஸ்ஓசி ஆகியவை இடம்பெறக்கூடும் என்று முன்னதாக வெளியான லீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் குவாட் கேமராக்களில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா + 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா + 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் நான்காவது கேமரா இடம்பெறும்.
முன்பக்கத்தை பொறுத்தவரை ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டருடன் வரும். ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக் செய்யப்பட வாய்ப்புள்ளது.

Post a Comment