Tech Oreo Blaster Tamil | Updated: 10 Jun 2020, 09:04 PM
25 மணிநேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் லேட்டஸ்ட் போட் வயர்லெஸ் இயர்போன்ஸ் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது; என்ன மாடல்? என்ன விலை?
புதிய போட் ஏர்டோப்ஸ் 441 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸின் விலை நிர்ணயம் என்ன? அம்சங்கள் என்ன? போன்ற முழு விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்!
போட் ஏர்டோப்ஸ் 441 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் அம்சங்கள்:
ஏர்டோப்ஸ் தொடரின் கீழ் வெளியான வயர்லெஸ் இயர்போன்களுடன் ஒப்பிடும் போது போட் ஏர்டோப்ஸ் 441 முதன்மையானது அல்ல இருப்பினும் இவைகள் மேம்பட்ட அம்சங்களுடன் வருகின்றன, அதுவும் மற்றவைகளை விட மிகவும் மலிவான விலையில்.
போட் ஏர்டோப்ஸ் 441-இல் ப்ளூடூத் 5.0 இணைப்பு உள்ளது. மேலும் அவை 6 மிமீ டைனமிக் டிரைவர்களால் இயக்கப்படுகின்றன. இது ஐபிஎக்ஸ் 7 சான்றளிக்கப்பட்டதாகும்.
போட் ஏர்டோப்ஸ் 441-இன் இந்திய விலை நிர்ணயம்:
போட் நிறுவனத்தின் இந்த புதிய இயர்போன்ஸ் ரூ.2,499 என்கிற இந்திய விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. மற்ற ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களுடன் ஒப்பிடும் போது இதன் விலை திகம் இல்லை என்றாலும் கூட, வேறு சில தயாரிப்புகளை விட இது இன்னுமும் கொஞ்சம் விலை உயர்ந்ததாகவே உள்ளது.
இருப்பினும் போட் ஏர்டோப்ஸ் 441-ஐ வாங்க சில காரணங்கள் இருக்கிறது!
நல்ல விஷயம் என்னவென்றால், போட் ஏர்டோப்ஸ் 441 ஆனது 25 மணி நேரம் வரை இயங்கக்கூடியது மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது. கடந்த ஆண்டு ரூ.2,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட போட் ஏர்டோப்ஸ் 451 உடன் ஒப்பிடும்போது, போட் ஏர்டோப்ஸ் 441 ஒரு நல்ல முன்னேற்றம் என்றே கூறலாம், நம்பியும் வாங்கலாம்!
إرسال تعليق