துப்பாக்கி சூடு தளத்தில் பனை விதை நடும் பணி!

 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சூடு தளத்தில் பத்தாயிரம் பனை விதை நடும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் துவங்கி வைத்தார்



இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள துப்பாக்கிசூடு தளத்தை சுற்றிலும் பத்தாயிரம் பனை விதைகள் நட உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து வல்லநாடு துப்பாக்கி சூடு தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு பனை விதை நடும் பணியை துவங்கி வைத்தார்

தென் மாவட்டங்களில் பனை மரங்கள் அழிந்து வரும் நிலையில் இந்த பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் இளைய தலைமுறைகள் பனை சிறப்புகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.


இதைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு தளத்தை சுற்றிலும் 10,000 பனை விதை நடும் பணியை காவலர்கள் செய்து வருகின்றனர்.


துப்பாக்கிச்சூடு தளத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றை எஸ்.பி. ஜெயக்குமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் செல்வம் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.



Post a Comment

أحدث أقدم