ட்ரூகாலர் அதன் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்க எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு இந்த 5 புதிய அம்சங்களே எடுத்துக்காட்டு.
நம்மை தொல்லைப்படுத்தும் ஸ்பேம் கால்களை ப்ளாக் செய்ய, போன் கால்கள் செய்ய, எஸ்எம்எஸ் அப்ளிகேஷன் என பல்வேறு விஷயங்களுக்கு ஏற்ற அப்ளிகேஷனாக ட்ரூகாலர் உள்ளது. இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துபவர்களின் சிறந்த அனுபவத்திற்காக ஒரு சில புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.
01. ஐபோன்களுக்கான ஸ்பேம் மெசேஜ் ஃபில்டர்
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில், ஸ்பேம் மெசேஜ் ஃபில்டராக, ட்ரூகாலர் ஏற்கனவே இருந்து வருகிறது. சமீபத்தில் தான் இந்த அம்சம் iOS பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதியை பெற, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், உங்கள் ஐபோனில் உள்ள ட்ரூகாலர் அப்ளிகேஷனை அப்டேட் செய்ய வேண்டும். பின் செட்டிங்க்ஸ்க்கு சென்று, மெசேஜை தேர்ந்தெடுத்து பின் மெசேஜ் ஃபில்டரிங் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதற்கு பிறகு வரும் எஸ்எம்எஸ் ஃபில்டரிங் ஆப்ஷனின் கீழ் ட்ரூகாலரைத் தேர்ந்தெடுக்கவும்.
02. அப்டேட் செய்யப்பட்ட ட்ரூகாலர்
மே மாதத்தில் ட்ரூகாலரின் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனும் அப்டேட் செய்யப்பட்டது. இதன் மூலம் ஹோம்டேபில், நாம் அனைத்து மெசஜ்களையும் கால்களையும், ஒரே லிஸ்டில் பார்க்க முடியும். அதுமட்டுமல்லாமல் இப்போது அப்ளிகேஷனில் காலர் ஐடி, பாப்-அப் போல் இல்லாமல்,ஸ்கீரின் முழுவதும் வருகிறது.
03. காலர் ஐடி hipe
முழு ஸ்க்ரீன் காலர் ஐடி இருப்பதால், ஏதேனும் ஒரு போன் கால் வரும்போது, கால் செய்பவர்களின் போட்டோவை இப்போது திரை முழுவதும் பெரியதாக காணலாம். அதுமட்டுமல்லாமல், காலர் ஐடி கலர் கோட் செய்யப்பட்டதால், போனை எடுக்காமலேயே எந்த வகையான கால் என்பதை அடையாளம் காண முடியும். நீலநிறத்தில் வந்தால், நமது காண்டாக்ட்ஸ் அல்லது தெரியாத நம்பரிலிருந்து வந்ததாக அர்த்தம். பர்ப்பிள் நிறமாக இருந்தால், பிசினஸ் அல்லது டெலிவரி சர்வீஸிலிருந்து வந்ததாகவும், சிவப்பு நிறமாக இருந்தால் அது ஸ்பேம் கால்கள் என்றும் அர்த்தம். கோல்ட் கலராக இருந்தால், அப்கிரேட் செய்யப்பட்ட கோல்ட் அக்கவுண்ட் கொண்ட நபர்களிடமிருந்து போன் வந்ததாக அர்த்தம்.
04. ஸ்பேம் ஆக்டிவிட்டி இன்டிகேடர்
ஸ்பேம் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் (புள்ளிவிவரம்) அம்சம், ஏப்ரல் மாதத்தில் ட்ரூகாலரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 3 வகையான தகவல்கள் உள்ளன. முதலாவது ஸ்பேம் ரிப்போர்ட்ஸ், இது எத்தனை ட்ரூகாலர் பயனர்கள், ஸ்பேம் என குறிப்பிட்ட போன் காலை குறித்துள்ளார்கள் என காட்டுகிறது, மேலும் இந்த எண்ணிக்கை அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும் காட்டுகிறது. இரண்டாவது கால் ஆக்டிவிட்டி, இதில் குறிப்பிட்ட் அந்த ஸ்பேம் நம்பர் சமீபத்தில் செய்த, போன் கால்களின் எண்ணிக்கையை பார்க்க முடியும். இதன் மூலம் அந்த நம்பர் எந்தளவுக்கு ஸ்பேமர் என நீங்கள் அறியலாம். மூன்றாவது பீக் காலிங் ஹவர்ஸ் ஆகும். இதில் அந்த ஸ்பேம் நம்பர் எந்த நேரத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்தது என நீங்கள் அறியலாம்.
05. கால் அலர்ட்
ட்ரூகாலர் அப்ளிகேஷனில் ஏற்கனவே உள்ள மற்றும் எல்லாருக்கும் பிடித்த ஒரு பொதுவான அம்சம், கால்அலர்ட் அம்சமாகும். இதன் மூலம், உங்கள் போனில் கால் வருவதற்கு முன்பே அதை பற்றிய நோட்டிபிகேஷன் வந்துவிடும். போன் கால் வருவதற்கு சில நொடிகள் முன்பு, உங்கள் போனில் ஒரு ட்ரூகாலர் பாப்அப் தோன்றும். அதில் உங்களுக்கு போன் செய்யும் நபரின் பெயரைக் நீங்கள் சில நொடிகள் முன்பே காணலாம்.
إرسال تعليق