மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி 41 ஸ்மார்ட்போனின் அறிமுகம் மிகவும் அருகில் இருப்பதாகத் தெரிகிறது, ஏனெனில் ஒரு டிப்ஸ்டர் ஜேய் 1 ஸ்மார்ட்போனுக்கான சில அதிகாரப்பூர்வ ரெண்டர்களைப் ஆன்லைனில் பகிர்ந்துள்ளார்.
இது "Corfu" என்கிற குறியீட்டுப் பெயரின் கீழ் காணப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை ஜி41 மாடலின் வெளியீடு குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
வெளியான ரெண்டர்கள் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் காட்டுகின்றன - அதில் 48-மெகாபிக்சல் மெயின் சென்சார் உள்ளது. இதன் கேமரா அமைப்பு பின்புறத்தில் மேல் இடது மூலையில் ஒரு செவ்வக வடிவமைப்பில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், Moto G41 ஆனது பிளாட் டிஸ்ப்ளேவுடன் காட்டப்பட்டுள்ளது, அதில் செல்பீ கேமராவிற்கான இடம் டிஸ்பிளேவில் மையமாக வைக்கப்பட்டுள்ள ஹோல்-பஞ்ச் கட்அவுட்டில் உள்ளது.
Moto G41 ஸ்மார்ட்போனின் ரெண்டர்களை லீக் செய்தது நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் நில்ஸ் அஹ்ரென்ஸ்மியர் (@NilsAhrDE) ஆவார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ரெண்டர்களின் படி, மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் வாய்ஸ் அசிஸ்டென்ட் பட்டன், வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் (இதுவே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனராகவும் செயல்படும்) வலதுபக்கத்தில் இருக்கும், அதே நேரத்தில் சிம் ட்ரே இடதுபுறத்தில் வைக்கப்படும்.
மேலும் வழியா ரெண்டர்கள் ஸ்மார்ட்போனின் மேற்பகுதியைக் காட்டாவில்லை. ஆனால் கீழே USB டைப்-சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் மற்றும் மைக்ரோஃபோன் இருப்பது தெரிகிறது.
மோட்டோ G41 ஸ்மார்ட்போன் மூன்று பக்கங்களிலும் தடிமனான பெஸல்கள் மற்றும் இன்னும் தடிமனான "கன்னம்" ஆகியவற்றைக் கொண்ட பிளாட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, லெனோவாவுக்குச் சொந்தமான பிராண்டிலிருந்து வரவிருக்கும் ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறும்.
இந்த கேமரா அமைப்பு ஒரு செவ்வக மாட்யூலில் வைக்கப்பட்டுள்ளது - அதில் 48 மெகாபிக்சல் மெயின் கேமரா, குவாட் பிக்சல் மற்றும் OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) ஆகியவைகள் பேக் செய்யப்படும்.
Gizmochina வலைத்தளம் வழியாக வெளியான அறிக்கையின்படி, XT2167-1 என்கிற மாடல் நம்பரின் கூடிய ஒரு மோட்டோரோலா ஸ்மார்ட்போன் பிரேசிலின் அனாடெல் சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது
அந்த லிஸ்டிங், குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் 4,700mAh பேட்டரியை பேக் செய்யும் என்றும், 4G LTE, Wi-Fi 802.11ac மற்றும் NFC போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களைக் கொண்டிருக்கும் என்பதையும் அறிய முடிகிறது. இதுதவிர்த்து குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் கூடுதல் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
நினைவூட்டும் வண்ணம், இந்த வார தொடக்கத்தில், Moto Edge X மற்றும் Moto Edge S30 ஆகியவை TENAA லிஸ்டிங்கில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. முந்தையது XT2201-2 என்கிற மாடல் பெயருடன் பட்டியலிடப்பட்டுள்ளது, பிந்தையது அதன் மாதிரி நம்பராக XT2175-2 ஐப் பெறுகிறது.
إرسال تعليق