ரியல்மி நார்சோ 50A ப்ரைம், ரியல்மி C35 மோனிக்கர்ஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்!

Realme நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன்களாக Narzo 50a Prime மற்றும் Realme c35 ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் 



                                                                    

ரியல்மி நிறுவனம், இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் Narzo 50i மற்றும் Narzo 50A ஸ்மார்ட்போன்களை அறிவித்தது.

அடுத்ததாக Narzo 50 மற்றும் Narzo 50 Pro போன்ற பிற நார்சோ பிராண்டட் போன்களை நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில் இந்த நார்சோ சீரீஸில் நார்சோ 50ஏ ப்ரைம் எனப்படும் மற்றொரு மாடலும் அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

கூடுதலாக, நிறுவனம் Realme C35 என்கிற புதிய சி-சீரிஸ் ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

டிப்ஸ்டர் பராஸ் குக்லானி ஒரு சோர்ஸ் கோடின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் RMX3511 மற்றும் RMX3516 என்கிற மாடல் நம்பர்களைக் கொண்ட Realme போன்கள் காணப்படுகிறது. அது Realme C35 மற்றும் Narzo 50A Prime மாடல்களின் மோனிக்கர்களாக இருக்கலாம் (அதாவது அடுத்தடுத்த மாடல்களாக இருக்கலாம்) என்று யூகிக்கப்படுகிறது.

RMX3521 என்கிற மாடல் நம்பரைக் கொண்ட மற்றொரு Realme போன் இருப்பதையும் வெளியான ஸ்க்ரீன் ஷாட் வெளிப்படுத்துகிறது. இருப்பினும் தற்போது வரை, அதன் இறுதி தயாரிப்பு பெயர் பற்றிய எந்த தகவலும் இல்லை.

RMX3251 என்கிற மாடல் நம்பர் முதன்முறையாகக் காணப்பட்டுள்ளது, அதேசமயம் RMX3511 மற்றும் RMX3516 ஆகியவை யூரேசிய பொருளாதார ஆணையத்தின் (EEC) தரவுத்தளத்தில் ஏற்கனவே காணப்பட்டன.

அவைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஸ்மார்ட்போன்களாக ஆனால் சில வேறுபாடுகளுடன் வரலாம். ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரியல்மி நிறுவனம் இந்த 2 போன்களை அறிமுகப்படுத்துமா என்பதில் தெளிவு இல்லை.

நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் நார்சோ 50ஐ மாடல் ரூ.7,499 க்கு அறிமுகமானது. மறுகையில் உள்ள Narzo 50A Prime ஆனது ரூ.11,499 க்கு அறிமுகமானது.

Realme Narzo 50A ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

- ரியல்மி யுஐ 2.0
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
- 6.5-இன்ச் எச்டி+ (720x1,600 பிக்சல்கள்) வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே
- 20: 9 விகிதம்
- 88.7 சதவீதம் ஸ்கிரீன்-டு- உடல் விகிதம்
- ARM Mali-G52 GPU மற்றும் 4GB RAM
- MediaTek Helio G85 SoC
- மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை (256 ஜிபி வரை) பயன்படுத்தி மேலும் விரிவாக்கும் விருப்பம்
- 128 ஜிபி வரை உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு
- 50 எம்பி + 2 எம்பி + 2 எம்பி
சூப்பர் நைட்ஸ்கேப், நைட் ஃபில்டர்கள், பியூட்டி மோட், எச்டிஆர், பனோரமிக் வியூ, போர்ட்ரெய்ட் மோட், டைம்லாப்ஸ், ஸ்லோ மோஷன் போன்ற கேமரா அம்சங்கள்
- 8 மெகாபிக்சல் செல்பீ
- 6000mAh பேட்டரி
- 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- USB டைப்-சி போர்ட், டூயல்-பேண்ட் வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி 5 மற்றும் டூயல் சிம் ஸ்லாட்
- 207 கிராம் எடை
- 164.5x75.9x9.6 மிமீ.

ரியல்மி நார்சோ 50i ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

- 6.5 இன்ச் டிஸ்பிளே
-89.5 சதவிகிதம் ஸ்கிரீன்-டூ-பாடி விகிதம்
- யுனிசாக் 9863 SoC
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி வரை உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு
- மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை (256 ஜிபி வரை) பயன்படுத்தி சேமிப்பு விரிவாக்கலாம்.
- 8 மெகாபிக்சல் AI பின்புற கேமரா
- 5 மெகாபிக்சல் AI செல்பீ
- 5,000 எம்ஏஎச் பேட்டரி
- எடை 195 கிராம்
- ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யுஐ கோ எடிஷன்
- 3.5mm ஆடியோ ஜாக், மைக்ரோ USB போர்ட், Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் v4.2 மற்றும் பல.

 

Realme-Narzo-50A விவரங்கள்
ஃபெர்பார்மன்ஸ் :
MediaTek Helio G85
டிஸ்பிளே:6.5 inches (16.51 cm)
சேமிப்பகம்:64 GB
கேமரா:50 MP + 2 MP + 2 MP
பேட்டரி:6000 mAh
இந்திய விலை:11499
ரேம்:4 GB

 

                                                                        Thank You                                   

Post a Comment

Previous Post Next Post