ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த கூகுள்! உண்மை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!


ரசிகர்களுக்கு பெரும் அடி கொடுத்த கூகுள்! இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி பற்றிய உண்மையை அறிந்து மக்கள் ஆச்சரியப்பட்டனர், நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்!

புது தில்லி: பிரபல நிறுவனமான கூகுள் தனது புதிய ஸ்மார்ட்போனான கூகுள் பிக்சல் 6 (Google Pixel 6) மற்றும் கூகுள் பிக்சல் 6 ப்ரோவை (Google Pixel 6 Pro) சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியதிலிருந்து, கூகுளின் இந்த முதன்மை ஸ்மார்ட்போன்களில் பயனர்களுக்கு 30W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் உலாவி வந்தது. ஆனால் சமீபத்தில் நிறுவனம், அந்த செய்தியைக் குறித்து உண்மைத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. அதைபற்று தெரிந்து கொள்வோம்.

கூகுள் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது:
சமீபத்தில், அதிகாரப்பூர்வ ப்ளாக் ஸ்பாட் படி, கூகுள் நிறுவனத்தின் முதன்மை ஸ்மார்ட்போன்களான கூகுள் பிக்சல் 6 மற்றும் கூகுள் பிக்சல் 6 ப்ரோ ஆகியவை 30W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வரவில்லை என்பதை கூகுள் (Google) உறுதி செய்துள்ளது. கூகுள் பிக்சல் 6 ஆனது 21W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் கூகுள் பிக்சல் 6 ப்ரோ 23W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது என்று கூகுள் தெளிவுபடுத்தியுள்ளது.

ஏன் இந்த தவறான புரிதல் ஏற்பட்டது?
கூகுள் பிக்சல் 6 மற்றும் கூகுள் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் 30W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வரவில்லை. ஆனால் இந்த ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் சார்ஜர் 30W சார்ஜிங் ஆதரவு கொண்டது என்று நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தபட்ட ஃபிளாக்ஷிப்  ஸ்மார்ட்போனை வாங்கும்போது, ​​சார்ஜர் அதனுடன் இணைப்பாக கிடைக்காது, அதைத் தனியாக வாங்க வேண்டும். மேலும் இந்த ஃபோன்கள் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆனால் அது உண்மை. ஏனென்றால் போனுடன் கிடைக்கும் சார்ஜரின் பேட்டரி திறன் தான் 30W ஆகும்.

சமீபத்திய கூகுளின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்னும் வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில் இனி வரும் காலத்திலும் இந்தியாவில் இந்த போன்களை நிறுவனம் அறிமுகப்படுத்தப் போவதில்லை என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Post a Comment

Previous Post Next Post